SELANGOR

இ-ஸ்போர்ட்ஸ் மைதானம் இளைஞர்களின் திறமைகளை வளர்க்க உதவும்

20 நவம்பர் 2024, 10:13 AM
இ-ஸ்போர்ட்ஸ் மைதானம் இளைஞர்களின் திறமைகளை வளர்க்க உதவும்

ஷா ஆலம், நவ. 20: கார்ல்டன் ஹோட்டல் செக்ஷன்13ஐ சிலாங்கூர் இ-ஸ்போர்ட்ஸ் மைதானமாக புதுப்பித்திருப்பது இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதோடு, அத்துறையின் வளர்ச்சியையும் வலுப்படுத்தும்

இந்நாட்டில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ந்து வருகிறது, மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த சிலாங்கூருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என கோத்தா டமன்சாரா மாநில சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது இசுவான் காசிம் கூறினார்.

"இந்த இ-ஸ்போர்ட்ஸ் மைதனம் இளைஞர்கள் பயிற்சி செய்வதை எளிதாக்குகிறது. எனவே இந்த ஹோட்டலை இ-ஸ்போர்ட்ஸ் கூடமாக மாற்றுவதற்கான மாநில அரசின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

"மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் மின்-விளையாட்டுகளை மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சட்ட மசோதா 2025 பற்றி விவாதித்த போது கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.