ஷா ஆலம், நவ. 19: முதியோர்களுக்கான ஒதுக்கீட்டில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையங்கள் (PAWE) கட்டும் திட்டம் முதியோர்கள் அதிகரித்து வரும் இந்நாட்டில் சவால்களை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினருக்கு உறுதுணையாக இருக்கும்.
இக்காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் நிதி நெருக்கடி மற்றும் குடும்பத்தை பராமரிப்பது உள்ளிட்ட பெரும் பொறுப்புகளை ஏற்க வேண்டியுள்ளது என லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையட் அஹ்மட் சையட் அப்துல் ரஹ்மான் (அல்டிமெட்) கூறினார்.
"இளைய தலைமுறை இரண்டு பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டும், அதாவது குழந்தைகளை வளர்க்கும் சூழ்நிலையில் வயதான பெற்றோரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
"அது பெரும் நிதி மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரின் நலன், குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சொந்த தேவைகளை உறுதிப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
"தற்போதுள்ள மையங்களை மேம்படுத்துவது உட்பட மேலும் மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையங்களை உருவாக்கவும், இளைய தலைமுறையினருக்கு ஆதரவாக, முதியோர் மீதான அக்கறையின் வெளிப்பாடாகவும் இருப்பதாக அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டசபையில் மசோதா 2025 மீதான விவாதத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
அடுத்த ஆண்டு பட்ஜெட் மூலம், மாநில அரசு கோலா லங்காட் மற்றும் உலு சிலாங்கூரில் மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையங்களை திறக்கும். மேலும் அம்பாங் ஜெயா, பாயா ஜாராஸ், செத்தியா ஆலம் மற்றும் ஶ்ரீ கெம்பாங்கன் ஆகிய இடங்களில் உள்ள மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையங்களின் வசதிகளை மேம்படுத்த RM400,000 ஒதுக்குகிறது.
முதியவர்கள் உடல்நலம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த, சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பராமரிப்பை ஊக்குவிப்பதற்காக மாநில நிர்வாகம் RM400,000 வழங்கும்.


