SELANGOR

பதிவுபெறாத தொழிற்சாலைகளில் 80 சதவீதத்தை 2028க்குள் பதிவு செய்ய மாநில அரசு இலக்கு

19 நவம்பர் 2024, 9:46 AM
பதிவுபெறாத தொழிற்சாலைகளில் 80 சதவீதத்தை 2028க்குள் பதிவு செய்ய மாநில அரசு இலக்கு

ஷா ஆலம், நவ 19: சிலாங்கூர் முழுவதும் 5,352 நிலங்களில் இயங்கும் 6,690 அங்கீகரிக்கப்படாத தொழிற்சாலைகளில் (KTK) 80 சதவீதத்தை 2028க்குள் பதிவு செய்ய மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.

தொழில்முனைவோருக்கு சிறப்பு ஊக்கச் சலுகைகள் மற்றும் நில பயன்பாட்டு மாற்றக் கட்டணங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடிகள் மூலம் இலக்கை அடைய முடியும் என்று உள்ளூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி  லீம் கூறினார்.

"பெயரளவு நில பிரீமியம் செலுத்துதல், சிறப்பு நில அனுமதி, தற்காலிக வணிக உரிமங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தொழில்நுட்பத் தேவைகளுக்கு இணங்குதல் ஆகியவை பிற சலுகைகளில் அடங்கும்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜனவரி 1, 2025 முதல் இந்த திட்டத்திற்கு இணங்க தவறினால்   குறிப்பிட்ட தொழிற்சாலை நிர்வாகிகள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சூயி லிம் எச்சரித்தார்

15 டிசம்பர் 2023 அன்று, மாநிலத்தில் உள்ள சட்டவிரோத தொழிற்சாலை நடத்துபவர்கள் அதிகாரப்பூர்வமாக்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது சாத்தியமான நிலம் பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கையை சூயி லிம் விடுத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.