SELANGOR

சுமார் 300,000 மூத்த குடிமக்களுக்கு பிறந்தநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

19 நவம்பர் 2024, 7:44 AM
சுமார் 300,000 மூத்த குடிமக்களுக்கு பிறந்தநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், நவ. 19 - இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை

மாநிலத்திலுள்ள சுமார் 300,000 மூத்த குடிமக்கள் தலா 150 வெள்ளி

மதிப்புள்ள பிறந்த நாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப்

பெற்றுள்ளனர்.

மூத்த குடிமக்களை மதித்துப் போற்றும் நோக்கிலான இந்த திட்டம்

எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின்

வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது என்று சமூக நலத் துறைக்கான

ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

மாநில அரசு மரண சகாய நிதியை மீண்டும் அமல்படுத்திய போதிலும்

இந்த மூத்த குடிமக்கள் ஜோம் ஷோப்பிங் திட்டம் அடுத்தாண்டும்

தொடரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் மரண சகாய நிதி அடுத்தாண்டு ஜூன் மாதம்

தொடங்கினாலும் இந்த பிறந்த நாள் ஜோம் ஷோப்பிங் திட்டம் ஜனவரி

முதல் தேதி முதல் வழக்கம் போல் தொடர்ந்து அமல்படுத்தப்படும்

என்றார் அவர்.

மூத்த குடிமக்கள் தேவைகேற்ற சேவைகள் உள்பட அத்தரப்பினருக்கான

முன்னெடுப்புகளை விரிவான அளவில் தரம் உயர்த்துவதில் மாநில அரசு

தற்போது கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் மாநில

சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டுக்கான தொகையை மாநில அரசு கடந்தாண்டு 150

வெள்ளியாக உயர்த்தியது. அதே சமயம் இந்த உதவியைப் பெறுவதற்கான

வருமான வரம்பும் 3,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை

அமல்படுத்த 3 கோடியே 75 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.