SELANGOR

கால்பந்து கார்னிவல் புதிய திறமையாளர்களுக்கான களமாக மாறியது

18 நவம்பர் 2024, 4:41 AM
கால்பந்து கார்னிவல் புதிய திறமையாளர்களுக்கான களமாக மாறியது

உலு லங்காட், நவ 18: இங்குள்ள செரீன் ஹைட்ஸ் மைதானத்தில் எம்பிஐ ஏற்பாடு செய்த கால்பந்து கார்னிவல் புதிய திறமையாளர்களுக்கான களமாக மாறியது.

இந்த கார்னிவல் சிலாங்கூரில் அடிமட்ட அளவில் கால்பந்து திறன் மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான மாநில அரசின் முயற்சியாகும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நான் விளையாட்டு துறையின் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியை வகித்த போது தொடங்கிய மேரா குனிங் அகாடமி மூலம் நான் மேற்கொண்ட முயற்சிகள் கோவிட் -19 தொற்றுநோயால் தடைபட்ட பின்னர் அடிமட்டத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப இது சிறந்த நேரம்.

"இந்த கார்னிவலில் சிலாங்கூர் எஃப்சி வீரர்கள் மற்றும் மேரா குனிங் ஜாம்பவான் களுடனான நட்பு ரீதியான அமர்வு சமூகத்துடனான உறவையும் வலுப்படுத்தியது," என்று அவர் கூறினார்.

இதில் நாக் அவுட் முறையில் 15 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான போட்டியில் செமினிலிருந்து மொத்தம் 16 கால்பந்து கிளப்புகள் பங்கேற்றன.

இதற்கிடையில், செரீன் ஹைட்ஸ் குடியிருப்பாளர்கள் சங்கம் கூட்டாக ஏற்பாடு செய்த கார்னிவல், விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவதையும், புதிய திறமைகளை வெளிக்கொணர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அமாட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.