ஷா ஆலம், நவ. 15- மாநில அரசின் பள்ளி உதவித் திட்டம் 2 கோடியே 65
லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அடுத்தாண்டும் தொடரப்படும்.
கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இத்திட்டத்திற்கு
இதுவரை 25 கோடியே 93 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ள
வேளையில் சராசரியாக 1,000 பள்ளிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளன
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்திலுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன்
மூலம் மாணவர்கள் கல்வி கற்பதற்கு உரிய உகந்த சூழலை உருவாக்கும்
நோக்கில் மாநில அரசின் இந்த பள்ளி உதவித் திட்டம்
அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த உதவித் திட்டத்திற்கு தேசியப் பள்ளிகள், தேசிய இடைநிலைப்
பள்ளிகள், முபாலிக் பள்ளிகள் விண்ணப்பம் செய்யலாம். அது தவிர
தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளிகள், தேசிய மாதிரி சீனப் பள்ளிகள், தேசிய
மாதிரி சீன இடைநிலைப் பள்ளிகள், சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளும்
இந்தி நிதிக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலாளர் வாரியம் இணையம் வாயிலாக விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்கலாம் என்றார் அவர்.


