SELANGOR

கோத்தா டமான்சாராவில் சாலை மேம்பாட்டு பணிக்காக 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு

15 நவம்பர் 2024, 5:31 AM
கோத்தா டமான்சாராவில் சாலை மேம்பாட்டு பணிக்காக 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 15: கம்போங் மேலாயு சுபாங் மற்றும் சுபாங் பெர்டானாவை இணைக்கும் தனியார் சாலையின் மேம்பாட்டு பணிக்காக 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கோத்தா டமன்சாரா மாநில சட்டமன்றத்தின் சிறிய திட்ட மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி கடந்த வாரம் சாலை மேம்பாட்டு பணி தொடங்கப்பட்டது என்று இசு வான் காசிம் கூறினார்.

தனியார் சாலைகளுக்கு ஒதுக்கீடு இல்லை, ஆனால், இச்சாலை கம்போங் மேலாயு சுபாங்கில் இருந்து சுபாங் பெர்டானா வரையிலான இணைப்பாக இருப்பதோடு, குடியிருப்பாளர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

"எனவே, உள்ளூர்வாசிகளின் பிரதான சாலையாக மாறிய இந்த பாதையை செப்பனிடுவதற்கு நாங்கள்  முயற்சி எடுத்தோம். நாங்கள் அதிகாரப்பூர்வ சாலையாக மாறும் வகையில் பாதையை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

"நில அலுவலக அளவில் எந்த தடையும் இல்லை, அவர்கள் பதிவு அங்கீகார கடிதத்தை வழங்கியுள்ளனர். அடுத்த செயல் முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், மேலும் இந்த பாதையை அதிகாரப்பூர்வ சாலையாக பதிவு செய்வது அடுத்த ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம் என சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். .

குடியிருப்பாளர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் அடுத்த ஆண்டு அப்பகுதியைச் சுற்றி தெரு விளக்குகள் அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.