SELANGOR

பட்ஜெட் 2025ல் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

15 நவம்பர் 2024, 4:17 AM
பட்ஜெட் 2025ல் சுற்றுலாத் துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

ஷா ஆலம், நவ 15: 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் (டிஎம்எஸ்2025) பிரச்சாரத்தை வெற்றிகரமானதாக மாற்ற சிலாங்கூர் பட்ஜெட் 2025ல் சுற்றுலாத் துறை கூடுதல் ஒதுக்கீட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்தவும், TMS 2025 உடன் இணைந்து எட்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்கை அடைவதற்காகவும் கூடுதல் ஒதுக்கீடு பெறப்படும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லீம் கூறினார்.

"இன்று மதியம் 3 மணிக்கு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் பட்ஜெட் தாக்கலுக்கா நாங்கள் காத்திருக்கிறோம்.

மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு பெறப்பட்ட ரிங்கிட் 5.3 மில்லியனுடன் ஒப்பிடும் போது அதிகரிக்கும் என்று அமிருடின் முன்பு கூறியிருந்தார்.

TMS 2025 முன்னிட்டு 60க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்குவதன் மூலம் எட்டு மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிலாங்கூர் இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.