ஷா ஆலம், நவ 15: கடந்த வாரம், பாங்கி நாடாளுமன்ற அலுவலகம் தீபாவளி திருநாளை முன்னிட்டு மீண்டும் பாங்கி தீப ஒளி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கு உட்பட பல்வேறு, போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தது. வருகையாளர்கள்
அனைவருக்கும் பல்வேறு இந்திய வகை உணவுகளும் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாங்கி இந்திய சமூக தலைவர்கள் என்ற முறையில் இந்நிகழ்விற்கு வருகை புரிந்திருந்த அனைவருக்கும் தனது நன்றி னை திரு சிவக்குமார் தெரிவித்தார் கொண்டார்.


