ஷா ஆலம், நவ 13: சிலாங்கூர் அக்ரோ ஐகோன் தேடல் 2024 திட்டத்திற்கான மொத்தம் 29 விண்ணப்பங்கள் இறுதித் தேதிக்குப் (நவம்பர் 10) பிறகு பெறப்பட்டன.
வேட்பாளர்களாகத் தகுதி பெறும் பங்கேற்பாளர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் முதன்மைக் குழு கூட்டத்திற்கு தனது தரப்பு தலைமை தாங்கும் என்று வேளான் ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.
"தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கழகங்களிடமிருந்து நாங்கள் 29 விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். அனைத்து விண்ணப்பங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, சிலாங்கூர் அக்ரோ ஐகான் 2024 க்கான இறுதி வேட்பாளர்கள் தேர்ந் தெடுக்க படுவர்.
"இறுதி வேட்பாளர்களின் பட்டியல் முடிவுகள் இந்த வாரம் அறிவிக்கப்படும், அதன் பிறகு ஐகான் அக்ரோ சிலாங்கூர் இறுதி வேட்பாளர்களிடம் வீடியோ பதிவு மற்றும் எடிட்டிங் அமர்வு நடத்தப்படும்" என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.
சிலாங்கூரை உணவு விநியோக மையமாக மாற்றவும் தொழிலில் ஈடுபடும் நபர்களை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் மூன்றாவது பதிப்பில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்கள், விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் வேளாண் சுற்றுலா என ஐந்து பிரிவுகள் போட்டியிடுகின்றன.


