SELANGOR

2,100 மாணவர்கள் மடிக்கணினி கடன் வசதியை பெற்றனர்

12 நவம்பர் 2024, 9:25 AM
2,100 மாணவர்கள் மடிக்கணினி கடன் வசதியை பெற்றனர்

ஷா ஆலம், நவ 12: சிலாங்கூரில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மொத்தம் 2,100 மாணவர்கள் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2024 வரை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மடிக்கணினி கடன் வசதியை பெற்றனர்.

அடிப்படை தொழில்நுட்பக் கடன் திட்டம் (SEPINTAS) தற்போதுள்ள நூலகச் சேவைகளுக்கு

மதிப்பைக் கூட்டுவதுடன் குறைந்த வருமானம் கொண்ட குழுவின் (B40) சுமையை

எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் கார்ப்பரேட் யூனிட் பிரிவின்

தலைவர் கூறினார்.

ஆறு மாத காலத்தில் புத்தகத்தை கடன் வாங்கும் செயல்முறையைப் போன்றே மடிகணினி கடன் திட்டம் செயல்படும். கோவிட் 19 தொற்றுநோய் தாக்கியதிலிருந்து மாறிவரும் கற்றல் முறைகள் காரணமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டம் சிலாங்கூர் முழுவதும் உள்ள 50 பிபிஏஎஸ் கிளைகளில் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அவர்கள் கடன் காலத்தை ஒரு மாதம் வரை

புதுப்பிக்கலாம்  என்று மீடியா சிலாங்கூரிடம் ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.

விண்ணப்பத் தேவைகள் சிலாங்கூரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் மாதத்திற்கு

RM8,000 க்கும் குறைவான குடும்ப வருமானத்தை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் மேலும் விளக்கினார்.

இத்திட்டத்திற்கு பிபிஏஎஸ் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். அவை

பரிசீலிக்கப்பட்டு, தற்போதுள்ள இருப்பைப் பொறுத்து ஏற்றுகொள்ளப்படும், என்று அவர்

கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.