ஷா ஆலம், நவ 11: நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் குழந்தைகள் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க சிலாங்கூரில் உள்ள குழந்தை பராமரிப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
ஹோட்டல் மர்டியா, ஷா ஆலம் மற்றும் லீ வென்யூ ஹோட்டல், பாங்கி ஆகிய இடங்களில் இலவச ஊக்கப் பயிற்சி நடத்தப்படும் என முகநூல் மூலம் இம்பாக் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு இடத்திற்கும் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டம் பராமரிப்பாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு தொடர்பான அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
"குழந்தை வளர்ச்சியில் திறன்களைப் பெற இந்த பயிற்சியில் சேரவும், அதன் மூலம் பராமரிப்பாளராக அறிவை வலுப்படுத்தவும். மதிப்புமிக்க கற்றல் அனுபவத்தை பெறவும் இப்போதே பதிவு செய்யுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் சான்றிதழைப் பெறுவது உட்பட இரண்டு நாட்கள் அவர்களின் தங்குமிடம் மற்றும் உணவுக்கான பொறுப்பை முழுமையாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) ஏற்றுகொள்ளும்.
பதிவு அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, நீங்கள் ஃபர்ஹானாவை 017-340 1364 (ஷா ஆலம்) அல்லது ஹக்கிமியை 011-1629 4988 (பாங்கி) தொடர்பு கொள்ளலாம்.
