SELANGOR

மின்னணுக் கழிவுகளை (இ-வேஸ்ட்) கொடுத்து ரொக்கத்தை பெற்றுகொள்ளும் வாய்ப்பு

12 நவம்பர் 2024, 8:04 AM
மின்னணுக் கழிவுகளை (இ-வேஸ்ட்) கொடுத்து ரொக்கத்தை பெற்றுகொள்ளும் வாய்ப்பு

ஷா ஆலம், நவ 12: பண்டார் உத்தாமா தொகுதியில் மின்னணுக் கழிவுகளை (இ-வேஸ்ட்) கொடுத்து ரொக்கத்தை பெற்றுகொள்ளும் வாய்ப்பை பெற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை SS21 பல்நோக்கு மண்டபத்தில் மறுசுழற்சி செய்யக்கூடிய மின்னணு கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைபெறும் என சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

புதிய ஆண்டை இன்னும் சிறப்பாக தொடங்க இதுவே சிறந்த நேரம். இனி பயன்படுத்தப்படாத மின்னணு அல்லது பழைய சாதனங்கள் இருந்தால், அவற்றை மறுசுழற்சி செய்வோம்.

மின்னணுக் கழிவுகளை முறையாகவும், பொறுப்புடனும் கையாளக் கற்றுக் கொள்வோம்.

தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய மாற்றம் நம்மில் இருந்தே தொடங்குகிறது என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

ஏற்றுகொள்ளும் மின்னணு பொருட்களில் மடிகணினி,ரைஸ் குக்கர், வாக்யூம் கிளீனர் ஆகியவை அடங்கும்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால், பொதுமக்கள் நிக்கோலஸை 012-613 1603 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.