SELANGOR

டுசுன் துவா சிலாங்கூர் தன்னார்வ பேரிடர் சங்கத்திற்கு எம்பிஐ படகை நன்கொடையாக வழங்கியது

12 நவம்பர் 2024, 8:02 AM
டுசுன் துவா சிலாங்கூர் தன்னார்வ பேரிடர் சங்கத்திற்கு எம்பிஐ படகை நன்கொடையாக வழங்கியது

ஷா ஆலம், நவ 11: வடகிழக்கு பருவமழைக்கு (MTL) தயாராகும் வகையில் டுசுன் துவா சிலாங்கூர் தன்னார்வ பேரிடர் சங்கத்திற்கு  (BSS) எம்பிஐ படகு ஒன்றை நன்கொடையாக வழங்கியது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற் கொள்வதுடன்,வெள்ள நேரங்களில் அவசர பணிகளை விரைவுபடுத்தவும் படகை பயன்படுத்தப்படலாம் என்று டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துட் அசிஸ் தெரிவித்தார்.

" உலு லங்காட் மாவட்டத்தில்  வெள்ளப் பேரழிவுகளில் இருந்து விடுபடாத பகுதிகளில் டுசுன் துவாவும் ஒன்றாகும்.

"வெள்ளத்தின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் சுமூகமான தயார் நிலை இருப்பது உள்ளூர் சமூகம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான எனது முக்கிய குறிக்கோளாகும்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

அதே நேரத்தில், இந்த படகை நன்கொடையாக வழங்குவதற்கான தனது விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் அக்கறை காட்டிய எம்பிஐ அறக்கட்டளைக்கு அவர் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

இந்த டுசுன் துவா சிலாங்கூர் தன்னார்வ பேரிடர் சங்கம் 2021 வெள்ளத்தின் போது 13 படகுகளுடன் நிறுவப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“அதன் உறுப்பினர்கள் மலேசிய குடிமைத் தற்காப்புத் துறை (JPAM) மூலம் பயிற்சி பெற்று படகை கையாளும் அடிப்படை திறன்களைக் கொண்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.