SELANGOR

மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை கொடுத்து 99 ஸ்பீட்மார்ட்  வவுச்சர்களை பெற்றுகொள்ளும் வாய்ப்பு

11 நவம்பர் 2024, 4:30 AM
மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை கொடுத்து 99 ஸ்பீட்மார்ட்  வவுச்சர்களை பெற்றுகொள்ளும் வாய்ப்பு

ஷா ஆலம், நவ 11: நவம்பர் 16 அன்று, பண்டார் பாரு சுங்கை பூலோவில் உள்ள எம்பிஎஸ்ஏ மெராந்தி செக்‌ஷன் U20 மண்டப வளாகத்தில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை கொடுத்து 99 ஸ்பீட்மார்ட் பல்பொருள் அங்காடி வவுச்சர்களை பெற்றுகொள்ளும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, அவர்கள் பல்வேறு வகையான மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொடுத்து  99 ஸ்பீட்மார்ட்  வவுச்சர்களை பெற்று கொள்ளலாம் மேலும், பொருட்களின் எடையின் அடிப்படையில் வவுச்சர்கள் வழங்கப்படும்.

"எம்பிஎஸ்ஏ அளவில் நடைபெறும் 5R கார்னிவலை முன்னிட்டு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வழங்கி 99 ஸ்பீட்மார்ட் வவுச்சர்களை பெற்று கொள்ளலாம் என்று ஷா ஆலம் மாநகராட்சியின் பொதுத் தூய்மை மற்றும் கழிவு நிலைத்தன்மை துறை முகநூலில் தெரிவித்துள்ளது.

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் வகைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் (5kg/RM10), காகிதங்கள் அல்லது புத்தகங்கள் (10kg/RM5) மற்றும் அலுமினிய கேன்கள் (1kg/RM5) ஆகியவை அடங்கும்.

மேலும், கார்னிவலில் விலங்குகள் சஃபாரி, மறுசுழற்சி பட்டறைகள் மற்றும் நிறுவனங்களின் கண்காட்சிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.