SELANGOR

வாகன இல்லா தினம் சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது

11 நவம்பர் 2024, 3:51 AM
வாகன இல்லா தினம் சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது

ஷா ஆலம்,நவ 11: நேற்று ஷா ஆலம் மாநகராட்சியின் (எம்பிஎஸ்ஏ)வாகன இல்லா தினம்

சுமார் 3,000 தனிநபர்களின் பங்கேற்புடன் நடந்தது.

அனைத்து பங்கேற்பாளர்களும் நகர மையத்தைச் சுற்றி ஐந்து கிமீ ஓட்டத்தில் பங்கேற்றதாக அதன் சமூக மேம்பாட்டு இயக்குநர் ஷஹ்ரின் அஹ்மட் தெரிவித்தார்.

“இது ஷா ஆலம் மாநகராட்சிக்கும் சமூகத்துக்கும் இடையிலான மாதாந்திர நிகழ்வு

ஆகும்.பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கை தவிர, சுற்றுச்சூழலின் தரத்தையும் இத்திட்டம் மேம்படுத்தும்.   மேலும், பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் இந்த திட்டம் மிகுந்த பலனைத் தருகிறது என்று ஷஹ்ரின் கூறினார்.

அதுமட்டுமில்லாம்ல், டத்தாரான் கெமெர்டேகாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ``MBSB`` வங்கியிலிருந்து 100 ஆதரவற்ற குடியிருப்பாளர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன. அவர்கள் RM100 மதிப்புள்ள அரிசி, எண்ணெய், சர்க்கரை, பால், மாவு மற்றும் சார்டின் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றனர்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.