SELANGOR

``பான் கானல் (Ban Canal) கார்னிவல் 2024``இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

7 நவம்பர் 2024, 8:19 AM
``பான் கானல் (Ban Canal) கார்னிவல் 2024``இல் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு  அழைப்பு

ஷா ஆலம், நவ 7: நவம்பர் 26 முதல் டிசம்பர் 1 வரை, பான் கானல் பாரிட் 14, சிம்பாங்

லிமா சபாக் பெர்ணமில், ``பான் கானல் கார்னிவல் 2024`` கண்டு மகிழுமாறு

பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலவச சுகாதார பரிசோதனைகள், உணவு மற்றும் பானங்கள் விற்பனை மற்றும் மராத்தான் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஆறு நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இடம்பெறும்.

இதில் உள்ளூர் விவசாயப் பொருட்களின் விற்பனை, இசை நிகழ்ச்சிகள் மற்றும் டிராகன் படகு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும் என எம்பிஐ அமைப்பாளர் தெரிவித்தார்.

பான் கானலை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன், பல்வேறு வயதினருக்கும் ஏற்ற வகையில் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்  காத்திருக்கின்றன, என்று முகநூலில்

தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை சபாக் பெர்ணம் மாவட்டம் மற்றும் நில அலுவலகம், சபாக் பெர்ணம் மாவட்ட கவுன்சில் மற்றும் மூலோபாய பங்காளிகளான சிலாங்கூர் ஸ்கேன் கானு நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.