SELANGOR

25,125 இடங்களில் சாலை பழுதுகளை இன்ஃப்ராசெல் சரி செய்தது

6 நவம்பர் 2024, 9:18 AM
25,125 இடங்களில் சாலை பழுதுகளை இன்ஃப்ராசெல் சரி செய்தது

ஷா ஆலம், நவ. 6 - மாநிலத்தின்  சாலை மேலாண்மை நிறுவனமான இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை   25,125  இடங்களில்  காணப்பட்ட சாலை பழுதுகளைச் சரி செய்தது.

இன்ஃப்ராசெல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய ஆய்வு முடிவுகள் மற்றும் 259 பேரின் புகார்களின் அடிப்படையில்  சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக  மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சாலைகள் ஊராட்சி மன்றங்கள் அல்லது பொதுப்பணித் துறையின் அதிகாரத்தின் கீழ் அல்லாமல்  இன்ஃப்ராசெல் நிறுவனத்தின் பணி வரம்பிற்கு உட்பட்டது  என்று அடையாளம் காணப்பட்டால் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த விவேக சொத்து மேலாண்மை முறை சாலைகள் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பாகும்  என்று அவர்  தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

பொது மக்கள்  #INFRASEL #RoadName #Regional என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸ் தளத்தில்   இடுகையிடுவதன் மூலம் சாலை பழுது தொடர்பான புகார்களை அளிக்கலாம் என்று இன்ஃப்ராசெல் கூறியது.

இந்த ஆண்டு மெகா 2.0 சாலை புனரமைப்புத்  திட்டத்தை செயல்படுத்த 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் முன்னதாகக் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.