SELANGOR

புக்கிட் காசிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு - இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறும்

6 நவம்பர் 2024, 8:18 AM
புக்கிட் காசிங் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு - இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், நவ. 6 - புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான

தீபாவளி பொது உபசரிப்பு எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை

பெட்டாலிங் ஜெயா, லாமான் எம்.பி.பி.ஜே. வளாகத்தில் நடைபெறும்.

இரவு 7.00 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இந்த பொது

உபரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து

கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

ஆர்.ராஜீவ் கூறினார்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்துபசரிப்போடு இந்திய

பாரம்பரியக் கலையான பரதம் உள்ளிட்ட நடனங்களும் ஆடல், பாடல்

நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற

மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் சிறப்பு

அங்கமாக ராஜீவ் தோசை சுட்டு விருந்தினர்களுக்கு பரிமாறுவார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.