SELANGOR

கேலிச்சித்திரம் மற்றும் குறும்பட வீடியோ போட்டியில் பங்கேற்க அழைப்பு

6 நவம்பர் 2024, 3:56 AM
கேலிச்சித்திரம் மற்றும் குறும்பட வீடியோ போட்டியில் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், நவ. 6: பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வன்முறைகளுக்கு

எதிரான 16 நாள் பிரச்சாரத்தை முன்னிட்டு கேலிச்சித்திரம் மற்றும் குறும்பட வீடியோ

போட்டியில் பங்கேற்க வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) பொதுமக்களை

அழைக்கிறது.

இப்போட்டியில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் பங்கேற்க

முடியும் என்றும் அனைத்து படைப்புகளும் நவம்பர் 30க்கு முன் சமர்ப்பிக்கப்பட

வேண்டும் என்றும் வனிதா பெர்டாயா சிலாங்கூர் தெரிவித்தது.

விழிப்புணர்வை சமூகத்திற்கிடையே பரப்ப ஓர் ஆக்கப்பூர்வமான போட்டியை

வனிதா பெர்டாயா சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ளது.

கொடுமைப்படுத்துதல், குழந்தை புறக்கணிப்பு மற்றும் குடும்ப வன்முறை போன்ற

கருப்பொருள்களின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்குங்கள்   என்று முகநூல்

மூலம் தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் RM1,500 மதிப்பிலான ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான

வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், அனைத்து படைப்புகளுக்கும் தவறான

மொழியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுக்கு 03-5545 4879 (Zura/Asyrani) ஐ அழைக்கவும் அல்லது

சமீபத்திய தகவலைப் பெற WBS சமூகப் பக்கத்தைப் பின்தொடரவும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வன்முறைக்கு எதிரான 16 நாள்

பிரச்சாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று கொண்டாடப்படும் ஒரு சர்வதேச

பிரச்சாரமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.