SELANGOR

வெள்ளம், புயலில் பாதிக்கப்பட்ட சபாக் பெரணம் மக்களுக்கு எம்.பி.ஐ. உதவி

5 நவம்பர் 2024, 8:23 AM
வெள்ளம், புயலில் பாதிக்கப்பட்ட சபாக் பெரணம் மக்களுக்கு எம்.பி.ஐ. உதவி

சபாக் பெர்ணம், நவ. 5- கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட  புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபாக் பெர்ணம்,   சுங்கை ஆயர் தாவாரிலுள்ள ஏழு குடும்பங்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) நிதியுதவியை வழங்கியது.

புயலில்  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் தலா 1,000 வெள்ளியையும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தலா 500 வெள்ளியையும் உதவித் தொகையாகப்  பெறுகின்றன என்று எம்.பி.ஐ. அறவாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி நோர் கூறினார்.

இதுதவிர உயர்கல்வி கூடத்தில் படிப்பைத் தொடரும்  மாணவர் ஒருவரின் சுமையைக் குறைக்கும் வகையில் அவருக்கு 1,000 வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் மேலும் விளக்கினார்.

சுங்கை ஆயர் தாவார்  சட்டமன்ற சேவை மையத்தின் சார்பாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  டத்தோ ரிசாம் இஸ்மாயில் முன்வைத்த கோரிக்கையின் பேரில்  பேரிடரில் பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது என்றார் அவர்.

பரிவுமிக்க அரசாங்கத்தின் அடையாளமாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்  அனைத்து விண்ணப்பங்களுக்கும்  எம்.பி.ஐ. அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது என்று இன்று சுங்கை ஆயர் தாவார்  சட்டமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.