ஷா ஆலம், நவ. 4 - கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானாவில் உள்ள கிள்ளான் மாவட்ட நூலகம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
இடைமாற்ற மற்றும் நட்புறவு கோட்பாட்டின் அடிப்படையிலான கிள்ளான் மாவட்டத்தின் இரண்டாவது மற்றும் சிலாங்கூரின் 13வது கிளையாகவும் இந்த நூலகம் விளங்குகிறது
என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் (பிபிஏஎஸ்) நிறுவனப் பிரிவின் தலைவர் கூறினார்.
இங்கு வருகையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் இலவச வைஃபை, சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கு வாசிப்பு மையம், உணவு அறை, கழிப்பறை, குளிப்பதற்கு ஷவர் உள்ளிட்டவை அடங்கும்.
விரிவான, அதிக இட வசதியுடன் கூடிய இந்த நூலகம் வருகையாளர்களுக்கு குறிப்பாக சிறார்கள் மற்றும் மாணவர்களுக்கு இதமளிக்கும் என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்ட போது ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.
ஜாலான் தெங்கு கிளானாவில் உள்ள சிலாங்கூர் பொது நூலகம் பொது விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும். மேல் விவரங்களுக்கு 03-3371 9429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாநிலத்திலுள்ள 104 பொது நூலகங்களை தரம் உயர்த்தும் மற்றும் 73 நூலகங்களை உருமாற்றம் செய்யும் பணிகள் முற்றுப் பெற்றுள்ளதாக சிலாங்கூர் மாநில பொது நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கடந்தாண்டு கூறியிருந்தார்.


