ஷா ஆலம், நவ 4: கிள்ளான் கிழக்கு நெடுஞ்சாலையில் உள்ள பகுதியை சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் 2025 பிரச்சாரத்தை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலா தளமாக மேம்படுத்த பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் எண்ணம் கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கிள்ளான் மாநகராட்சியுடன் தனது தரப்பு விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று தோணி லியோங் தக் சீ கூறினார்.
"கிள்ளான் கிழக்கு நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று கட்டிடங்கள் உள்ளன. இதில் சோங் கோக் கோபிடியம் போன்ற பல கடைகள் உள்ளன. அவை மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும்.
“சமீபத்தில் கடை உரிமையாளர்க சங்கத்துடனும் ஆலோசித்தேன். அவர்கள் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.எனவே, கிள்ளான் மாநகராட்சியுடன் கூட்டத்தை நடத்தி இப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவுவேன்.
"கிள்ளான் கிழக்கு நெடுஞ்சாலையை மேம்படுத்தி சுற்றுலாத் துறையின் மையமாக மாற்ற முடியும், ஏனெனில் அப்பகுதியில் இலகு ரயில் போக்குவரத்து (LRT) நிலையம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
மேலும், மக்களின் வசதிக்காக சூரிய சக்தியில் இயங்கும் ஒளி உமிழும் (எல்இடி) விளக்குகளை அதிக அளவில் நிறுவ தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"சமீபத்தில் நான் மாநில அரசிடம் இருந்து மேலும் 20 சோலார் விளக்குகளுக்கு விண்ணப்பித்து, ஒப்புதலுக்காக காத்திருக்கிறேன். சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு கூடுதலாக இப்பகுதி பாதுகாப்பானதாக இருக்க இந்த வசதி அவசியம்," என்று அவர் கூறினார்.


