ஷா ஆலம், அக். 29- தீபாவளியை முன்னிட்டு மாநில அரசு ஏற்பாடு
செய்துள்ள சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில்
ஆட்டிறைச்சியை குறைவான விலையில் பொதுமக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு
வழங்கப்படுகிறது.
வழக்கமாக நாட்களில் 18.40 வெள்ளி விலையில் விற்கப்படும் 500 கிராம்
ஆட்டிறைச்சி தீபாவளியை முன்னிட்டு .12.00 வெள்ளிக்கு வழங்கப்படுகிறது
என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் முகமது கைரில்
முகமது ராஸி கூறினார்,
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகளைக் குறைப்பதற்கும்
எளிதான முறையில் பொருள்களை வாங்குவதற்கும் ஏதுவாக இந்த மலிவு
விற்பனை நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு மலிவு விற்பனை சுங்கை பாஞ்சாங், தஞ்சோங் சிப்பாட்,
செந்தோசா, கோலக் கிள்ளான், சுங்கை ராமால் ஆகிய தொகுதிகளில்
இன்று நடைபெறுகிறது.
நாளை புதன் கிழமை சுங்கை பாஞ்சாங், டெங்கில், ரவாங், புக்கிட் காசிங்,
புக்கிட் மெலாவத்தி ஆகிய தொகுதிகளில் இந்த மலிவு விற்பனை
நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


