SELANGOR

டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த சுபாங் ஜெயா மாநகராட்சி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது

29 அக்டோபர் 2024, 7:19 AM
டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த சுபாங் ஜெயா மாநகராட்சி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது

ஷா ஆலம், அக் 29: டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் சுபாங் ஜெயா மாநகராட்சி இணைந்து லார்வாக்களை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஹாட்ஸ்பாட் இடங்களாக ஶ்ரீ முதியாரா அபார்ட்மென்ட் மற்றும் புத்ரா ஐட்ஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேயர் கூறினார்.

"பிகேடி பெட்டாலிங்குடன் இணைந்து ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவற்றை அழிக்கும் திரவத்தை தெளிக்கும் பணியை எம்பிஎஸ்ஜே மேற்கொண்டது.

"டிங்கி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு குடியிருப்பாளர்கள் நினைவூட்டப்படுகின்றனர்" என்று டத்தோ அமிருல் அசிசான் அப்துட் ரஹீம் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.

41வது தொற்றுநோயியல் வாரத்தில் சுபாங் ஜெயாவில் மொத்தம் 6,927 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பு நடவடிக்கையாக, ஏடிஸ் கொசுக்கள் பெருகக்கூடிய இடமாக இருக்கும் நீர் தேக்கங்களை அழிப்பதற்கும், சுற்றுவட்டாரப் பகுதிகளை சுய பரிசோதனை செய்துகொள்ளவும் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.