SELANGOR

நவம்பர் மாதத்தில் 3 தொகுதிகளில் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் ஏற்பாடு

29 அக்டோபர் 2024, 5:38 AM
நவம்பர் மாதத்தில் 3 தொகுதிகளில் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் ஏற்பாடு

ஷா ஆலம், அக் 29: எதிர்வரும் நவம்பர் மாதம் மாநில அரசு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் 3 தொகுதிகளில் தொடரும்.

நவம்பர் 3 ஆம் தேதி டத்தோ அஹ்மட் ரசாலி பல்நோக்கு மண்டபம் (செமெந்தா), நவம்பர் 9 அன்று எம்பிகேஎல் பாரு பந்திங் டவுன்ஹால் (மோரிப்) மற்றும் நவம்பர் 10 PJS 2C/6 பல்நோக்கு மண்டபம் (தாமான் மேடான்)ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் மற்றும் பிறவற்றிற்கான இலவச சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள இந்த

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பதிவில் சிக்கல் இருந்தால் 1800226600 என்ற எண்ணில் Selcare ஐத் தொடர்பு கொள்ளவும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.