SELANGOR

தீபாவளியை முன்னிட்டு பெகாவானிஸ் RM196,100  ஒதுக்கீடு

28 அக்டோபர் 2024, 10:10 AM
தீபாவளியை முன்னிட்டு பெகாவானிஸ் RM196,100  ஒதுக்கீடு

கோலா லங்காட், அக். 28:  இந்த வாரம் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல மன்றம் பெக்காவானிஸ் RM196,100 ஒதுக்கீடு செய்துள்ளது.

53 தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான நிதி மாநிலத்தின் 1,060 இந்தியர்களுக்கு பயன் அளித்ததாக அவர் கூறினார்.

இந்த பண்டிகை இந்தியர்களால் மட்டுமல்ல, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பதால் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது என டத்தின் ஶ்ரீ மஸ்டியானா முகமட்டின் கூறினார்.

"இன்று ஷா ஆலம், பந்திங், சுங்கை பிலேக், தஞ்சோங் சிப்பாட் மற்றும் டெங்கில் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 100 நபர்கள் உதவி பெற்றனர்.

“அது மட்டுமின்றி, யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) நிறுவனத்திடம் இருந்து 200 மாணவர்களுக்கு பேக் டு ஸ்கூல் நன்கொடையை பணமாகவும், நன்கொடை பைகளாகவும் வழங்கினோம்.

இந்த நன்கொடை மூலம் அவர்கள் மேலும் சிரத்தையுடன் படித்து வெற்றி பெற முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.