SELANGOR

அம்பாங் ஜெயாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை அடுத்த வாரம் பெறப்படும்

28 அக்டோபர் 2024, 9:52 AM
அம்பாங் ஜெயாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை அடுத்த வாரம் பெறப்படும்

ஷா ஆலம், அக் 28: தாமான் மெலாவத்தி, அம்பாங் ஜெயாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தின் முழு அறிக்கை அடுத்த வாரம் சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கவுன்சிலுக்கு (எம்டிஇஎஸ்) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும், அந்த இடம் வாழ்வதற்கு பாதுகாப்பானது என்று கண்டறிய பட்டதாகவும், அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் பல பின்தொடர்தல் நடவடிக்கைகளை எடுத்ததாகவும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"அந்நிலம் தனிப்பட்ட சொத்து, மறுசீரமைப்பு அனைத்து உரிமையாளரால் செய்யப்பட வேண்டும். எம்டிஇஎஸ்யின் முழு அறிக்கையை அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களில் பெறுவோம்.

"அதற்குப் பிறகு, மாநில அரசால் மேலும் பல உறுதியான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அக்டோபர் 15 அன்று, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாமான் மெலாவத்தி,ஜாலான் இ 6 அம்பாங்கில்  உள்ள 20 வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் ஜாலான் இ 5 பொது மண்டபத்தின் தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்)தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.