SELANGOR

உலு லங்காட் தொகுதியில் 750 பேருக்கு வெ.200  தீபாவளி பற்றுச்சீட்டுகள் விநியோகம்

28 அக்டோபர் 2024, 8:26 AM
உலு லங்காட் தொகுதியில் 750 பேருக்கு வெ.200  தீபாவளி பற்றுச்சீட்டுகள் விநியோகம்
உலு லங்காட் தொகுதியில் 750 பேருக்கு வெ.200  தீபாவளி பற்றுச்சீட்டுகள் விநியோகம்

செமினி, அக்.28 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலுலங்காட் தொகுதியில் 750 பேருக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

வசதி குறைந்தவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு சார்பில் தலா 200 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக டூசுன் தூவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

இந்த 750 பற்றுச்சீட்டுகளில் செமினி வாழ் இந்தியர்களுக்கு 400 பற்றுச்சீட்டுகளும் டூசுன் தூவா இந்தியர்களுக்கு 350 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

இதில் ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கும் பிகேஆர், மஇகா, ஐபிஎப் கட்சிகளுக்கும் இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இது மக்களின் சுமைகளைக் குறைப்பதற்காக வழங்கப்பட்டது.

இவ்வேளையில் மலேசியாவிலுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் தமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஜோஹான் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன், சந்திரன் ராமசாமி, செமினி வட்டார இந்திய சமூக தலைவர் நடேசன், உலு லங்காட் மஇகா தொகுதித் தலைவர் ராசசெல்வம் கருப்பையா, இளைஞர் பிரிவுத் தலைவர் நிலவன், ஐபிஎப் தேசிய தலைமைச் செயலாளர் மோகன் முத்துசாமி, இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ் குமார் சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.