(ஆர்.ராஜா)
கிள்ளான் அக். 27- சிலாங்கூரிலுள்ள இந்தியர்களின் நலன் காப்பதில்
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிக அக்கறை காட்டி
வருவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
Dato' Menteri Besar Dato' Seri Amirudin Shari menyampaikan cek cura Bantuan Kewangan Lima Agama Selangor dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR
இந்திய சமூகத்திற்கு குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினரின் உயர்வுக்கும் கல்வி மேம்பாட்டிற்கும் அவர் தொடர்ச்சியாக
வழங்கி வரும் நிதியுதவி உள்ளிட்ட முன்னெடுப்புகள் அதற்கு சான்றாக
விளங்குகின்றன என்று அவர் சொன்னார்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதில் குறைந்த வருமானம் பெறும்
பி40 தரப்பினர் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில்
இவ்வாண்டு தீபாவளிக்கு 44 லட்சம் வெள்ளியை பற்றுச் சீட்டு வடிவில்
22,000 பேருக்கு மாநில அரசு பகிர்ந்தளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பற்றுச் சீட்டுத்திட்டத்தின் வாயிலாக வசதி குறைந்தவர்கள்
தீபாவளியைக் கொண்டாடுவதில் எதிர்நோக்கும் சிரமங்களை ஒரளவு
குறைக்க இயலும் என்றும் அவர் சொன்னார்.
இது தவிர இந்தியர்கள் உள்பட இம்மாநிலத்திலுள்ள அனைத்து இன
மக்களின் சுபிட்மான நல்வாழ்வை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களை
மாநில அரசு அமல்படுத்தி வருவதாகவும் பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இங்கு நடைபெறும் இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்விலும் இந்திய
சமூக நலனுக்கான பல திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில்
வசதி குறைந்த உயர்கல்வி மாணவர்களுக்கான நிதியுதவி,
தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு மானியம், ஐ-சீட். எனப்படும்
சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு
இலாகா வாயிலாக இந்திய சிறு வணிகர்களுக்கு வர்த்தக உபகரணங்கள்
வழங்குவது ஆகியவையும் அடங்கும் அவர் கூறினார்.
Orang ramai hadir dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR
இந்திய சமூகத்தின் நலனுக்காக மாநில அரசு தலைமைத்துவம்
முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக நாம் நன்றி
கூறக்கடமைப் பட்டுள்ளோம். அதே சமயம், பல்லின சமூகத்தில் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்ய
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
நமது பெருநாளை இந்திய சமூகம் எவ்வாறு சிறப்பாக கொண்டாடுகிறது
என்பதை எடுத்துரைப்பதற்கும் நமது கலை, கலாசாரம் மற்றும் சமய
உணவுகளை கட்டிக்காப்பதற்கும் இத்தகைய தீபாவளி கொண்டாட்ட
நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்