SELANGOR

மைகீத்தா, குருகுல மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் - சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வழங்கினார்

24 அக்டோபர் 2024, 9:33 AM
மைகீத்தா, குருகுல மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் - சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வழங்கினார்
மைகீத்தா, குருகுல மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் - சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வழங்கினார்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், அக் 24 - கெர்லிங்கில் செயல்பட்டு வரும் மைகீத்தா சூரியன் ஆசிரமம் மற்றும் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் இயங்கி வரும்  குருகுல மாணவர்களுக்கு   கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ்   தீபாவளி புத்தாடைகளை வழங்கினார்.

அவ்விரு மையங்களிலும்  தங்கியிருக்கும்  6 முதல் 18 வயது வரையிலான 39 மாணவர்களை கிள்ளானில் உள்ள பிரபல ஜவுளியகத்திற்கு அழைத்து வந்த பிரகாஷ்,   அவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அம்மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி ஜிப்பாவை தேர்வு செய்தனர்.

பிறகு கிள்ளான் புக்கிட் திங்கியில்  உள்ள இந்தியா கேட் உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அருசுவை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.  சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் அன்பான உபசரிப்பில் மாணவர்கள் பெரிதும் மனம் நெகிழ்ந்து போயினர்.

இதனிடையே,   மைகீத்தா சூரியன் ஆசிரமம் மற்றும் குருகுல மாணவர்களுக்கு புத்தாடைகளைகளோடு விருந்தோம்பலும் வழங்கி மகிழ்வித்த சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களுக்கு தாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மைகீத்தா சூரியன் ஆசிரமத்தின் நிறுவனர் அ. கனகராஜா  கூறினார்.

மாணவர்களுக்கான புத்தாடைகள் மற்றும் விருந்தோம்பலுக்கு உண்டான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்ட அவர், அவர்களுக்கு தீபாவளி ரொக்க அன்பளிப்புகளையும் வழங்கினார். பிரகாஷ் அவர்களின் இந்த பரிவு எங்களை மிகவும் மனம் நெகிழச் செய்கிறது என்று  குறிப்பிட்டார்.

கெர்லிங் தமிழ்பள்ளியில் செயல்பட்டு எதிர்வரும் குருகுலத்தில் 22 மாணவர்கள் தங்கிப் படிக்கும் வேளையில்  கெர்லிங் நகரில் உள்ள மைகீத்தா சூரியன் ஆசிரமத்தில் 16 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.