SELANGOR

சிலாங்கூர் ஆரோக்கியமான குழந்தைகள் திட்டம் மாநிலத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிரச்சனையை 20 சதவிகிதம் குறைந்துள்ளது

24 அக்டோபர் 2024, 7:56 AM
சிலாங்கூர் ஆரோக்கியமான குழந்தைகள் திட்டம் மாநிலத்தில் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பிரச்சனையை 20 சதவிகிதம் குறைந்துள்ளது

சைபர் ஜெயா, அக் 24: சிலாங்கூர் ஆரோக்கியமான குழந்தைகள் திட்டம் (அசாஸ்)

 2021 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து மாநிலத்தில் வளர்ச்சி குன்றிய

குழந்தைகளின் பிரச்சனை 20 சதவிகிதம்  குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது

சிலாங்கூரில் அதிகரித்து வரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு

பிரச்சனையை தீர்க்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என அசாஸ்

திடத்தின் இணை ஆராய்ச்சியாளர், டாக்டர் ரோசிலாவதி மாட் யா கூறினார்.

தரவின் அடிப்படையில், சிலாங்கூர் குழந்தைகளின் எடை மற்றும் உயரம்

பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையில் கவலையளிக்கின்றது, இது

முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டும்.

2021 ஆம் ஆண்டு நிறுவப் பட்டதில் இருந்து, வளர்ச்சி குன்றிய குழந்தைகளின்

பிரச்சனையை 20 சதவிகிதம் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம், அந்த

முயற்சி தொடரும் என்றும் அவர் கூறினார்.

இன்று சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார மாநாட்டில் குழு

உறுப்பினராக அழைக்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

12 வயதுக்குட்பட்ட 3,000க்கும் மேற்பட்ட எடை மற்றும் உயரம் பிரச்சனைகள்

உள்ள குழந்தைகள் அசாஸ் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

2024 முதல், நாங்கள் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்போம், அவர்கள்

சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு வழிகாட்டுவார்கள், குறிப்பாக முழுமையான

ஊட்டச்சத்துடன் உணவைத் தயாரிக்க உதவுவார்கள். பலர் இந்த ஊட்டச்சத்து

உணவை விலை உயர்ந்ததாக நினைக்கிறார்கள், ஆனால்,  அது

உண்மையில்லை என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.