SELANGOR

பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நடைபாதைகளை மேம்படுத்த RM3.9 மில்லியன் ஒதுக்கீடு

23 அக்டோபர் 2024, 10:05 AM
பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நடைபாதைகளை மேம்படுத்த RM3.9 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 23: அடுத்த ஆண்டு பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நடைபாதைகளை

மேம்படுத்த RM3.9 மில்லியன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

வழங்கப்படும் வசதிகள் நகரவாசிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சமூக ஒருங்கிணைப்பைத் தூண்டுவதை உறுதி செய்வதில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி உறுதியாக உள்ளது என்று அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள்

சம்பந்தப்பட்ட விஷயங்களை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, காரணம் இது மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கிறது.

பொழுதுபோக்கு வசதிகள், நடைபாதைகள் மற்றும் கால்வாய் அமைப்புகளை மேம்படுத்தும் பணி எட்டு திறந்தவெளி பகுதிகள் மற்றும் இரண்டு விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்படும்  என்று நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி சிறப்பு கவுன்சில் கூட்டத்திற்கு (பட்ஜெட் 2025) தலைமை தாங்கிய போது கூறினார்.

ஜாலான் BU 4/1, ஜாலான் செசவி 6/19C, ஜாலான் PJU 3/18B, மற்றும் ஜாலான் SS 23/7

உள்ளிட்ட பல சாலைகளை தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் முகமது ஜஹ்ரி உள்ளூர்

அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.