SELANGOR

சிலாங்கூர் ரெந்தாக் நிகழ்ச்சி 2024இல் ஸ்கூட்டர், தொலைக்காட்சி வெல்ல வாய்ப்பு

22 அக்டோபர் 2024, 8:31 AM
சிலாங்கூர் ரெந்தாக் நிகழ்ச்சி 2024இல் ஸ்கூட்டர், தொலைக்காட்சி வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், அக் 22: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாநில கலாச்சார நிலைக் குழுவால்

ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் ரெந்தாக் நிகழ்ச்சி 2024 இல் அதிர்ஷ்ட குலுக்கு மூலம்

RM6,000 க்கும் அதிகம் மதிப்புள்ள ஸ்கூட்டரை வெல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு எம்பிஎஸ்ஏ ஆடிட்டோரியத்தில் இரண்டு வருகையாளர்களுக்கு தொலைக்காட்சிகள் வழங்கப்படும் என மாநிலச் செயலாளரின் அலுவலகம் தெரிவித்தது.

நுழைவு இலவசம். அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் பரிசுகளை வெல்ல வாய்ப்பு

வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 80களின் புகழ்பெற்ற ரோக் கலைஞர்களான டத்தோ ஜமால் அப்டில்லா,

சமுதேரா குழு மற்றும் பிரான்சிஸ்கா பீட்டர் ஆகியோரின் நினைவுகளைக் கொண்டு வரும் பாடல்கள் படைக்கப்படும்.

காலை 10 மணிக்குத் தொடங்கும் இந் நிகழ்ச்சியில் சந்தை, காபி கடை, விண்டேஜ் இசை

உபகரணக் கடை, 80களின் மளிகைக் கடை போன்றவை இடம்பெறும்.

நுழைவுக்கான பதிவு https://mydaftar.com/rentak-selangor/form.html என்ற

இணைப்பின் மூலம் செய்யலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.