ஷா ஆலம், அக் 22: யாவாஸ்சின் வருடாந்திர நிகழ்வா
செத்திய சிட்டி மாநாட்டு மையத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (SIBF) 2024 நிகழ்வை முன்னிட்டு இந்த விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் பள்ளிப்பை, ஸ்டேஷனரி செட், உணவுப் பாத்திரம், தண்ணீர் பாட்டில், வண்ண பென்சில்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படும்.
தகுதியுள்ள தாய்மார்கள், தந்தைகள் மற்றும் பாதுகாவலர்கள் 2025 பள்ளி அமர்வுக்கு வழங்கப்படும் இந்த உதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள், என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
யாவாஸ் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தகுதியுடையவர்களுக்கான உதவியை நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை சிலாங்கூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 2024 இல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடத்தில் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பத் தேவைகள்:
– 2018 – 2021 வரை சிலாங்கூரில் பிறந்த குழந்தைகள்
– RM5,000 க்கும் குறைவான குடும்ப வருமானம்
– சிலாங்கூரில் வசிப்பவர்
– பெற்றோர் சிலாங்கூர் வாக்காளராக இருக்க வேண்டும்
– இதற்கு முன் யாவாஸ் பள்ளிப் பைக்கான உதவி பெறாதவர்களாக இருக்க வேண்டும்
– விண்ணப்பதாரர் தாபோங் வாரிசான் அனாக் சிலாங்கூர் உறுப்பினராகவும் இருக்கக் கூடாது


