ஷா ஆலம், அக்.15: இன்று காலை UiTM செக்சன் 1இல் மரம் விழுந்த சம்பவம் ஒன்றில் நான்கு சக்கர வாகனம் சேதமடைந்தது.
காலை 11.24 மணியளவில் பலத்த மழையின் போது இந்த சம்பவம்
நிகழ்ந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை
என்றும் சிலாங்கூர் ஜேபிபிஎம் இயக்க உதவி இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
ஷா ஆலமின் ஏழு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு தீயணைப்பு துறையினரால் மரங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகள் இன்று காலை முதல் தொடர்ந்து
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனத்த காற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோலாலம்பூர், அம்பாங் மற்றும் உலு கிளாங் ஆகியவை அடங்கும்.


