(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 15- பருவநிலை மாற்றம் காரணமாக இன்று காலை
தொடங்கி பெய்து வரும் நிலையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினர் எஸ். பிரகாஷ் தாமான் ஸ்ரீ மூடாவில் களமிறங்கி நிலையை
அணுக்கமாகக் கண்காணித்து வருகிறார்.
ஸ்ரீ மூடாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் அபாயம் பகுதிகளுக்கு ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜனுடன் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு ஜாலான் 25/1, ஜாலான் 25/56 மற்றும் தாமான் ஸ்ரீ கீலாட் ஆகிய பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட கால்வாய்களில் நீரோட்டத்தையும் ஆய்வு செய்தார்.
வெள்ள அபாயம் நிறைந்த பகுதியாக தாமான் ஸ்ரீ மூடா
வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பந்தாய் விரைவு பணிக்குழு முழு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பிரகாஷ் சொன்னார்.
இன்று பிற்பகல் வரை இங்கு வெள்ள அபாயம் காணப்படாததோடு
கால்வாய்களிலும் நீரோட்டம் சீராக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள்
மிகுந்த விழப்புடன் இருக்கும்படி அறிவுறுத்திய அவர், நீரோட்டம் தடை
படும் வகையில் குப்பைகளை கால்வாய்களில் போடுவதை தவிர்க்கும்படி
கேட்டுக் கொண்டார்.


