SELANGOR

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற உத்தரவு

15 அக்டோபர் 2024, 8:05 AM
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற உத்தரவு

ஷா ஆலம்,அக் 15: இன்று காலை ஏற்பட்ட நிலச் சரிவைத் தொடர்ந்து ஜாலான் இ6, தாமான் மெலாவத்தி, அம்பாங் அருகே உள்ள 20 வீடுகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற உத்தரவிடப் பட்டனர்.

இன்று காலை 11.42 மணிக்கு இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்க இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

"20x20 மீட்டர் பரப்பளவு மற்றும் 30 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்பாளர்களின் வீடுகள் பாதிக்கப்படவில்லை.

"இதுவரை எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் சம்பவம் நடந்த பகுதியில் இன்னும் நகர்வு உள்ளது," என்று அவர் கூறினார்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நாள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் பல பகுதிகள் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் கோலாலம்பூர், அம்பாங் மற்றும் உலு கிளாங் ஆகியவை அடங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.