ஷா ஆலம்,அக் 15: வெள்ளத் தணிப்புத் திட்டத்தை (ஆர்டிபி) முடிக்கத் தவறிய ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும் மாநில அரசு தயங்கவில்லை.
எதிர்வரும் நவம்பரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, ஒன்பது வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
"மாநில அரசு RM482 மில்லியன் மதிப்பிலான 41 வெள்ளத் தணிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும்,அவற்றில் ஒன்பது பிரச்சனைக்குரியவை மற்றும் அவை இன்னும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாததால், அவைகள் ``நோய்வாய்ப்பட்ட`` திட்டங்கள் என வகைப்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம்.
"இதில் சுங்கை பூலோ, ஈஜோக், சுங்கை காயு அரா மற்றும் அதன் துணை நதிகள். சுங்கை சிஜாங்காங், சுங்கை காண்டிஸ், சுங்கை கெம்போங், தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா மற்றும் சுங்கை பினாங் ஆகியவை அடங்கும்" என்று அவர் கூறினார்.
அண்மையில் அரச நிர்வாகக் கட்டிடத்தில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புகளை ஒருங்கிணைக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


