SELANGOR

உரிமையாளர் இல்லாத ஓடைகளை பராமரிக்க மாநில அரசு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது

15 அக்டோபர் 2024, 4:33 AM
உரிமையாளர் இல்லாத ஓடைகளை பராமரிக்க மாநில அரசு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது

ஷா ஆலம்,அக் 15: வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சிலாங்கூர் முழுவதும் உரிமையாளர் இல்லாத ஓடைகளை பராமரிக்க மாநில அரசு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.

தூய்மைப்படுத்தும் நடவடிக்கை 300 கி.மீட்டருக்கும் அதிகமான ஓடைகளை உள்ளடக்கியது, இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கட்டத்திற்கும் RM2.5 மில்லியன் ஒதுக்கப்பட்டது என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இசாம் ஹாஷிம் கூறினார்.

"முதல் கட்டம் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் பருவமழையை எதிர்கொள்ள நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் அரச நிர்வாகக் கட்டிடத்தில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புகளை ஒருங்கிணைக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, நவம்பர் முதல் மார்ச் 2025 வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அந்த காலகட்டத்தில் நான்கு முதல் ஆறு எபிசோடுகள் தொடர்ந்து கனமழை பெய்யும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.