SELANGOR

வெள்ளப் பிரச்சனையை மாநில அரசு நிர்வகிக்கத் தவறி விட்டதாகக் கூறிய குற்றச்சாட்டு விவேகமற்றது

15 அக்டோபர் 2024, 3:52 AM
வெள்ளப் பிரச்சனையை மாநில அரசு நிர்வகிக்கத் தவறி விட்டதாகக் கூறிய குற்றச்சாட்டு விவேகமற்றது

ஷா ஆலம் அக் 15: வெள்ளப் பிரச்சனையை மாநில அரசு நிர்வகிக்கத்

தவறி விட்டதாகக் கூறிய சிலாங்கூர் பாஸ் இளைஞரின் அறிக்கை

விவேகமற்றது என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் தற்போது மழை அளவு மிக அதிகமாக உள்ளது மற்றும்

உள்கட்டமைப்பு அடிப்படையில் தயார் செய்ய நீண்ட காலம் தேவை என்பதை

அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இஷாம் அசிம்

கூறினார்.

வானிலை மாற்றங்கள் மற்றும் பலவற்றின் காரணமாக இப்போது மழை மிகவும்

அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் வடிகால் அமைப்பு 80 முதல் 100

மில்லிமீட்டர் மழையை மட்டுமே தாங்கும்.

நாங்கள் வடிகால்களை மேம்படுத்த விரும்புகிறோம், ஆனால் வடிகால்கள்

பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் உள்ளன என்பதால் அதற்கு கால

அவகாசம் தேவை; என்று அவர் கூறினார்.

கடந்த வியாழன் அன்று மாநில நிர்வாகக் கட்டிடத்தில் சிலாங்கூர் மாநில

வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு குறித்த ஊடக மாநாட்டில்

அவர் இவ்வாறு கூறினார்.

வெள்ளத்தை நிர்வகிக்க மாநில அரசின் தோல்வியைக் கண்டு மாநில மக்கள்

அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற சிலாங்கூர் பாஸ் இளைஞரணித் தலைவர்

முகமட் சுக்ரி ஓமரின் கூற்று குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.தற்போதைய வானிலை, காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது என்பதை

எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.