பெட்டாலிங் ஜெயா, அக். 14: பண்டார் ஸ்ரீ டமன்சாரா 2 இடைநிலைப் பள்ளி சபைக்கூடல் தளத்தை மேம்படுத்த டமன்சாரா நாடாளுமன்ற மையம் மொத்தம் RM 110,000 செலவிட்டது.

பிரதமர் துறையின் (ஜேபிஎம்) ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின்

(ஐசியு) ஒதுக்கீடு மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் ஒரு வருடத்திற்கு

மேற்கொள்ளப் பட்டது என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின்

கவுன்சிலர் (மண்டலம் 7) தெரிவித்தார்.

சேதமடைந்த தளம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை

விளைவிக்கும் துளைகள் ஆகியவை சரிசெய்யவும்  மாணவர்களின் வசதிக்காகவும்

 பள்ளி நிர்வாகம் செய்த விண்ணப்பத்தை  மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டிற்கு

டமன்சாரா எம்பி கோபிந்த் சிங் டியோ ஒப்புதல் அளித்தார்  என்று லியோங் சீ செங் கூறினார்