ஷா ஆலம், அக்.14 – மோரிப் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு இம்மாதம் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தாமான் ஶ்ரீ புத்ரா மண்டபத்தில் மாலை மணி 6.30க்கு தொடங்கும்.
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை புரிய உள்ளார் என மோரிப் தொகுதியின் இந்திய சமுதாய தலைவர் திரு சம்சோன் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்வில் மோரிப் தொகுதியில் வசிக்கும் B40 குழுவை
சேர்ந்த சுமார் 100 பேருக்கு உணவு கூடையை வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வருகையாளருக்கும் உணவு வழங்கப்படும் என்றார்.


