SELANGOR

ஷா ஆலம் வாகன இல்லாத நாளில் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

14 அக்டோபர் 2024, 5:51 AM
ஷா ஆலம் வாகன இல்லாத நாளில் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், அக் 14: நகரின் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) நேற்று ஏற்பாடு செய்திருந்த ஷா ஆலம் வாகன இல்லாத நாளில் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டத்தாரன் மெர்டேகாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் சைக்கிள் ஓட்டுதல், இளைஞர் பஜார், இலவச சுகாதாரப் பரிசோதனை, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேலும், ஷா ஆலம் நடமாடும் அலுவலகத்தில் மதிப்பீட்டு வரி அல்லது அபராத்தை சரி பார்த்துச் செலுத்தும் வாய்ப்பை பெற்றதோடு, 100க்கும் மேற்பட்ட வருகையாளர்களின் ஃபார்ம் ஃப்ரெஷ் பானங்களும் இலவசமாக வழங்கப்பட்டது என பிபிடி தெரிவித்தது.

இந்நிகழ்வில் ஹரி மெஸ்ரா என்ற தளமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான புகார்களை அனுப்புவதற்கான ஒரு தளமாகும். இது, எம்பிஎஸ்ஏ வின் சேவைக்கு மென்மேலும் மெருகூட்டும் செயலாகும் என்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.