ஷா ஆலம்,அக் 12: மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இருந்து மொத்தம் 136 தொழில் முனைவோர் மடாணி சிலாங்கூர் தொழில் முனைவோர் (டம்ஸ்) திட்டத்தில் RM2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பட்டியலிடப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஆவர். அவர்கள் அதிகபட்ச மதிப்பாக RM30,000 கொண்ட வணிக உபகரணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொழில் முனைவோர் தங்கள் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் திறனையும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் திறனை கொண்டுள்ளனர்" என்று முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"முன்பு RM2 மில்லியனாக இருந்த டம்ஸ் இந்த ஒதுக்கீடு RM4 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அதிகரிப்பின் மூலம் தொழில் முனைவோருக்கான திட்டங்களைப் பன்முகப் படுத்தலாம்.
"உதாரணமாக, உபகரண மானியங்களை வழங்குவதோடு, தொழில்முனைவோர்களுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிகாட்டுதல் அல்லது சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க உதவுதல் போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு வரை 1,029 குறுந் தொழில் முனைவோர்களுக்கு உதவுவதற்காக RM 20.06 மில்லியன் மாநில அரசால் செலவிடப்பட்டது டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


