SELANGOR

திடீர் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க நீர் ஓடைகள் சுத்தம் செய்யும் பணியை எம்பிஎஸ்ஏ மேற்கொண்டது

12 அக்டோபர் 2024, 8:45 AM
திடீர் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க நீர் ஓடைகள் சுத்தம் செய்யும் பணியை எம்பிஎஸ்ஏ மேற்கொண்டது

ஷா ஆலம், அக் 12: திடீர் வெள்ளப் பிரச்சனையைச் சமாளிக்க மாவட்டம் முழுவதும் நீர் ஓடைகள் சுத்தம் செய்யும் பணியை எம்பிஎஸ்ஏ மேற்கொள்கிறது

நகர்ப்புறங்களில் நீர் ஓடைகளில் வீசப்படும் குப்பைகளால் அடிக்கடி திடீர் வெள்ளம், ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

எம்பிஎஸ்ஏ சுற்றுச்சூழல் மற்றும் திடக்கழிவுத் துறையால் ஒவ்வொரு வாரமும் நீர் ஓடைகள் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

"கம்போங் குபு கஜா, கம்போங் மெலாயு சுபாங்,பாயா ஜராஸ், ஜாலான் கெபூன் மற்றும் கோத்தா கெமுனிங் போன்ற நகர மையம் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் வகையில் எம்பிஎஸ்ஏ பல்வேறு உபகரணங்களை தயார்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

அதில் இரண்டு ஃபைபர் படகுகள், மூன்று அதிவேக மோட்டார்படகுகள், இரண்டு கூடுதல் படகுகள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும்  தலைக்கவசங்கள் ஆகியவை அடங்கும்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.