SELANGOR

தாமான் மேடானில் தீபாவளி கார்னிவல் - பொதுமக்களுக்கு அழைப்பு

11 அக்டோபர் 2024, 10:50 AM
தாமான் மேடானில் தீபாவளி கார்னிவல் - பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், அக் 11: அடுத்த வாரம், டத்தாரான் அனாக் மூடாவில், தாமான் மேடானில் தீபாவளி கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள தாமான் மேடான் இந்திய சமூக தலைவர் திரு அசோகன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தீபாவளி கார்னிவல் நக்சராஸ் சிலாங்கூர் கழகம் மற்றும் மயோன் கிரியேஷன்ஸ் ஒத்துழைப்பில் அக்டோபர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பல்வேறு பொருட்களை நியாமான விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடை ஆபரணங்கள், உணவுகள், கைவினை மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலவற்றை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பை தவற விடக்கூடாது என திரு அசோகன் கூறினார்.

மேலும், பொதுமக்கள் திரளாக வந்து இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.