SELANGOR

சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ய விவாதம் மேற்கொள்ளவில்லை

11 அக்டோபர் 2024, 10:46 AM
சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ய விவாதம் மேற்கொள்ளவில்லை

ஷா ஆலம், அக் 11: சிலாங்கூர் பொதுக் காப்பீட்டு திட்டத்தை (இன்சான்) செயல்படுத்துவதை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த விவாதமும் மேற்கொள்ளவில்லை என்று எம்பிஐ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் மக்களைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு இத்திட்டத்தை எதிர்காலத்தில் தொடர்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது என்று சைபோல்யாசன் எம் யூசோப் கூறினார்.

"2025 இல் முடிவடையும் இந்த பொதுக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்ய எந்த விவாதமும் இல்லை," என்று அவர் கூறினார்.

நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய பொதுக் கருத்துக் கேட்கும் அமர்வு, பாதுகாப்புத் திட்டத்தின் நிர்வாகம், செயல்படுத்தல் மற்றும் வழிநடத்துதல் தொடர்பான மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் (ADN) கேள்விகளுக்கு விடையளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இதில் சாய்பொல்யாசனைத் தவிர, முன்னாள் எம்பிஐ தலைமைச் செயல் அதிகாரி நோரிடா சிடேக் மற்றும் சிலாங்கூர் மாநில துணைச் செயலாளர் டத்தோ ஜோஹாரி அனுவார் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டம் 1 அக்டோபர் 2022 முதல் தொடங்கப்பட்டது. இது 30 நாட்கள் கொண்ட குழந்தை முதல் 80 வயது பெரியோர் வரையிலான ஆறு மில்லியன் குடிமக்களுக்கு விபத்துக் காப்பீடு தொகையை இலவசமாக வழங்குவதற்கான மாநில அரசின் முன்முயற்சியாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.