SELANGOR

கிள்ளான், புக்கிட் ராஜாவில் பாரம்பரிய பலகாரம் செய்யும் நிகழ்வு- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

11 அக்டோபர் 2024, 3:13 AM
கிள்ளான், புக்கிட் ராஜாவில் பாரம்பரிய பலகாரம் செய்யும் நிகழ்வு- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிள்ளான், புக்கிட் ராஜாவில் பாரம்பரிய பலகாரம் செய்யும் நிகழ்வு- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

(ஆர்.ராஜா)

கிள்ளான், அக். 11- பண்டார் பாரு கிள்ளான் பாராட் கம்யூனிட்டி மடாணி

இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்திய பாரம்பரிய பலகாரமான முறுக்கு சுடும்

நிகழ்வு இங்குள்ள புக்கிட் ராஜா, பங்சாபுரி டாலியாவில் நேற்று முன்தினம்

நடைபெற்றது.

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினரும் பண்டார் பாரு கிள்ளான்

பாராட் கம்யூனிட்டி மடாணி தலைவருமான அருள்நேசன் ஜெயபாலன்

ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிள்ளான் தகவல் இலாகாவின்

ஒருங்கிணைப்பாளர் புவான் ஜரிமா சிறப்பு வருகை புரிந்தார்.

இந்திய பாரம்பரிய உணவான முறுக்கை தயாரிக்கும் நுணுக்கங்களைக்

அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில்

மூவினங்களையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டதாக

ஜெயபாலன் கூறினார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி

பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு

சுற்றுவட்டார மக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக அவர்

தெரிவித்தார்.

இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற உதவிய அனைத்துத்

தரப்பினருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அருள்நேசன்

கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.