ஷா ஆலம்,அக் 10: உணவு வியாபாரி ஒருவர் வடிகால் தண்ணீரைப் பயன்படுத்தி பாத்திரங்களைக் கழுவுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.இச்சம்பவம் அதன் நிர்வாகப் பகுதியில் நடக்கவில்லை என எம்பிஎஸ்ஏ தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட கடையின் இடத்தை கண்டறிய உடனடி நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், ஆய்வின் முடிவில் அக்கடை ஷா ஆலமில் செயல்படவில்லை என்பதைக் கண்டறிந்ததாகவும் எம்பிஎஸ்ஏ தெரிவித்தது.
"உண்மையற்ற மற்றும் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த கூடிய எந்தவொரு செய்தியையும் வெளியிட வேண்டாம் என்று எம்பிஎஸ்ஏ பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
"எம்பிஎஸ்ஏ-வின் நற்பெயரை பாதிக்கும் என்பதால் தவறான செய்திகளை பரப்பும் எந்த ஒரு தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிபிடி தெரிவித்துள்ளது.
"SISPA பொது புகார் மேலாண்மை அமைப்பு மூலம் தூய்மையை பராமரிக்காத உணவு வளாகங்கள் இருந்தால் எம்பிஎஸ்ஏயிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
சுகாதார விதிமுறைகளுக்கு இணங்காத உணவு தொழில்முனைவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்பிஎஸ்ஏ நினைவூட்டியது.


